நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தமையானது அரசாங்கத்தை மாற்ற எதிர்க்கட்சி மேற்கொண்ட முயற்சியின் தோல்வியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருக்கு எதிரான கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நீர்பாசனம் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா,
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் ஆதரவு வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் சில எதிர்க்கட்சிகளும் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை.
மக்களின் நலன் கருதி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவில்லை. கூட்டு எதிர்க்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மாத்திரமே அது கொண்டு வரப்பட்டது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.