ஸ்ரீ ல.சு.கட்­சியில் பஷில் ராஜ­ப­க்ஷ­விற்கு முன்­னு­ரிமை வழங்கக் கூடாது :ஜோன் சென­வி­ரத்ன

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பஷில் ராஜ­ப­க்ஷ­விற்கு முன்­னு­ரிமை வழங்கக் கூடாது. பஷில்தான் எமது தோல்­விக்கு மூல ­கா­ரணம் எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன, கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு இரண்டாம் தர பதவி வழங்­கக்­கூ­ற­வில்லை.
Collage_Fotor
மாறாக இரண்டாம் தர­வ­ரி­சையில் இடம்­கொ­டுக்க வேண்­டு­மென்றே வலி­யு­றுத்­தினேன் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். 

இது தொடர்­பாக தொழில் மற்றும் தொழி­ல் உறவுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, 
ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சித் தலை­மையை 2020 ஆம் ஆண்டில் ஆட்­சியில் அமர்த்த வேண்­டு­மென்­பதே எனது இலக்­காகும். அதற்­காக கட்­சியை வெற்­றி­பெறும் கட்­சி­யாக கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். 

இதற்­க­மைய அண்­மையில் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினேன்.

அதன்­போது “சுதந்­திரக் கட்சி பிள­வு­ப­டு­வதை நான் விரும்­ப­வில்லை, என்றும் கட்­சியின் முன்­னேற்­றத்­திற்­காக தனது கட­மையை செய்ய தயா­ராக இருப்­ப­தா­கவும் ” என்­னிடம் கூறினார். இதனை நான் ஜனா­தி­ப­திக்கும் தெரி­யப்­ப­டுத்­தினேன். 

கட்­சியை முன்­னேற்­று­வது தொடர்பில் மஹிந்த ராஜ­பக்ஷ பங்­க­ளிப்பு வழங்­குவார் என்ற நம்­பிக்கை இன்று இல்­லாமல் போய்­விட்­டது. அவர் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்தேன். ஆனால் இன்று அவ­ரது செயற்­பா­டுகள் திருப்­ப­தி­ய­ளிக்­க­வில்லை.

என­வேதான் கோதா­பா­ய­வுடன் பேசினேன். இதற்கு கட்­சிக்குள் இருக்கும் ராஜ­பக்ஷ எதி­ரா­ளிகள் எதிர்க்­கலாம். ஆனால் அது தொடர்பில் பின்னர் சிந்­திக்­கலாம் என்றார்.