காணாமல் போனவர்கள் விவகாரம் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் மனோவிற்கு கடிதம்

human-rights-1-696x696_Fotor

 

காணாமல் போனவர்கள் விவகாரம் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம், நல்லிணக்கப் பொறிமுறைமை குறித்த இணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவல்லவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

காணாமல் போனவர்கள் அலுலகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் நியாயமானதே என தெரிவித்துள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு அண்மையில் மனோ தித்தவல்ல அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் பலரின் கருத்துக்களை செவிமடுத்ததன் பின்னரே இந்த முதல் அறிக்கை வெளியிடப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணி;ப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை அறியாது காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் அமைப்பது பிழையானது என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மனோ தித்தவல்ல கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

எனினும், தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் ஒதுக்கப்படுவதோ அல்லது உதாசீனம் செய்யப்படுவதோ ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் விவகாரம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து நீ;ண்ட காலமாக தமது அமைப்பு குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்களுடன் கலந்தாலோசித்து கருத்துக்களைத் திரட்டி அதன் அடிப்படையில் முடிவுகள் பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.