வளர்த்து வந்த ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டிய கூலித்தொழிலாளி

ராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளி ஒருவர் தான் வளர்த்து வந்த ஆட்டையும், மனைவியின் நகைகளையும் விற்றும் தனது வீட்டில் கழிவறை கட்டி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் துங்கார் பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கான்டிலால் ரோட் கூலித்தொழிலாளியான இவர் துங்கார்பூர் ரதன்பூர் சாலையில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள்,தாய், மற்றும் சகோதரரின் விதவை மனைவியுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் கழிவறை வசதி கிடையாது. உள்ளூரில் வசிக்கும் பா.ஜ.க.வினர் சிலர் மோடி அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கான்டிலாலிடம்  கூறியுள்ளனர். கழிவறை கட்ட அரசு தரப்பில் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

201606100155384834_Man-sells-goat-to-build-toilet-in-Rajasthan_SECVPF.gif

முதல்கட்டமாக வேலைகளை அவரே தொடங்கினார். முதல் தவணை தொகை அரசு தரப்பில் இருந்து கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு பொருட்களை வாங்கினார்.எனினும் மேற்கொண்டு அரசு தரப்பில் வழங்கப்பட்ட தொகை அவருக்கு போதவில்லை. எனவே அவர் வளர்த்து வந்த 5 ஆடுகளையும், மனைவி வைத்து இருந்த வெள்ளி நகைகளையும் விற்று  கழிவறை கட்டும் பணியை முடித்தார். இது குறித்து தகவல் அறிந்த வந்த அந்த ஊரின் துணைத்தலைவர் கான்டிலாலை சந்தித்து அவரின் ஆர்வத்தை பாராட்டினார். மேலும் மனைவியின் வெள்ளி நகைகளை அடகு வைத்தவற்றை மீட்பதற்கு அரசு தரப்பில் இருந்து நிதி உதவியும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.