பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – அத்துமீறி நுழைபவர்களை கண்டதும் சுட உத்தரவு

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

201606100042453969_Security-Increased-At-Pathankot-Air-Base-Following_SECVPF.gif

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையின் எச்சரிக்கையை விடுத்தைதொடர்ந்து விமானப்படை தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ராணுவம், எல்லைபாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

கடந்த ஜனவரி 2ம் தேதி, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் பதான்கோட் பகுதியில் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ராணுவ உடையில் புகுந்த தீவிரவாதிகளுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இரண்டு நாட்களாக நடந்த சண்டையில், 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 7 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். விமானப்படை தளத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பதான்கோட் பகுதி சுமார் 16 கி.மீ சுற்றளவு கொண்டது. இதில் சுமார் 5000 மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.