நிதி அமைச்சர் ரவி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 வாக்குகளால் தோல்வி!

 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தின் போது நிதி அமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ravi-karunanayake

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 

இதன்போது மஹிந்த ராஜபக்ஸ, த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆறுமுகன் தொண்டமான், சந்திர ஸ்ரீ கஜதீர, மற்றும் ஸ்ரீலத் தம்லத் உட்பட 28 பேர் நாடாளுமன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.