கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்காக திறந்து வைப்பு !

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை, மக்கள் பார்வைக்காக நாளையதினத்தில் இருந்து 6 நாட்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என ஜனாதிபதிஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த நிகழ்வு இடம் பெறஇருப்பதாகவும்,ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு இணங்க நடவடிக்கைமுன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவுகுறிப்பிட்டுள்ளது. 

பிரித்தானியர் ஆட்சி காலத்தில் (1804) இந்த இல்லம் பிரித்தானிய ஆளுநரின்உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்டுள்ளது. 

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கை ஆளுநரின் இல்லமாக இருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது. 

1972 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர குடியரசாக மாறியதன் பின்னர் ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லமாக மாற்றப்பட்டது. 

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 29 ஆளுநர்கள் மற்றும் 6இராஜாங்க அமைச்சர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.