பேஸ்புக் நிறுவனரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

markzuckerberg2007-e1400081922221_Fotor
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பின்டெர்ஸ்ட், லிங்க்ட்இன் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் அவர்மைன் (Ourmine) என்னும் ஹேக்கர் குழுவினர் இச்செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பெருமைப்படும் வகையில் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர், அதில் அவர்களை தொடர்பு கொள்ள ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பலர் ஜூக்கர்பெர்க்கின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டுள்ள டுவிட்டர் கணக்கை கடைசியாக கடந்த 2012-ம் ஜூக்கர் பெர்க் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் ஜூக்கர்பெர்க் மிக பலவீனமான பாஸ்வேர்டை பயன்படுத்தியதால்தான் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை எளிதாக முடக்க முயன்றதாக தெரிவித்துள்ள ஹேக்கர்கள், ‘டடட’ (dadada) என்ற பாஸ்வேர்டை அவர் பயன்படுத்தி வந்ததாகவும் அம்பலப்படுத்தியுள்ளனர்.