தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம்

blast_armycamp_Fotor

 

சாலாவ இராணுவம் முகாமில் பரவிய தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்த பகுதியில் புகைமூட்டம் தொடர்ந்தும் நிலவுகின்றது.

குறித்த பகுதியில் காணப்படும் புகையை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும் என சூழல் நலன்கள் , உடல்நலன் மற்றும் உணவு பராமரிப்பு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீ பரவிய பகுதிகளில் மூடாத கிணறுகள் காணப்படுமாயின் அவற்றினை துப்பரவு செய்த பின்னரே பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.