முன்னாள் , இந்நாள் ஜனாதிபதிகள் வெளிநாடு செல்கின்றனர்

file image

mahintha maithripala

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளார். 

லண்டனில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் விஷேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்கின்றார். 

இந்த மாநாட்டின் பின்னர் ஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்திற்கு பின்னர் இந்தியாவிற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார். 

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை  உகண்டா நோக்கி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

யொவேரி முசவேனி 06 வது தடவையாக மீண்டும் அந்தநாட்டு ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ அங்கு செல்கின்றார். 

மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே அவர் அங்கு செல்கின்றார்.