சிறுபான்மை அரசாங்கத்துக்கு தொடர்ந் தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க முடியாது. உலகில் எந்த நாட்டிலும் சிறுபான்மை அரசாங்கங்கள் ஆட்சி நடத்தியதில்லையென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமைப்பதற்கோ ரணில் விக்ரமசிங்க பிரதமராகுவதற்கோ நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வுக்கு 48 ஆச னங்கள் இருக்கின்றன. எங்களுக்கு 125க்கு மேற்பட்ட ஆசனங்கள் இருக்கின்றன. நாங் கள் தான் இந்த அரசாங்கத்துக்கு பலத்தை கொடுத்து வருகின்றோம்.
நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு 100 நாட்க ளுக்கே ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தோம். தற்போது 100 நாட்கள் முடி வடைந்துள்ளன. எனவே சிறுபான்மை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் எங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியாது.
தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் முகமாக பாராளுமன்றத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என கூறுகின் றனர். ஆனால் தற்போதைய முறைமையி லேயே எதிர்வரும் பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே தொடர்ந்தும் இந்த பாராளுமன்றத்தை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களை வேட்டையாடுவதற்கும் அவர்களுக்கு தொந்தரவளிப்பதற்கும் இன்னும் அவர்களுக்கு அளிக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களுக்கும் நாங்கள்தான் இந்த அரசாங்கத்துக்கு பலம் கொடுத்து வருகின்றோம். தற்போது இந்த நிலைமையை முடித்து கொள்வதற்கு காலம் ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மை அரசாங்கத்துக்கு கொள்கையொன்றை உருவாக்கி வழி நடத்த முடியாது. பிரச்சினைகள் ஏற்படும். எனவே இதற்கான சிறந்த வழி பாராளுமன்றத்தை கலைத்து பெரும்பான்மையை கொண்ட அர சாங்கம் ஒன்றை அமைக்க மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதாகும். இந்த அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கோ அல்லது நிதி தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்கோ முடியாது. அதற்கான பலம் பாராளுமன்றத்தில் இல்லை.
எனவே பாராளுமன்றத்தில் சிறுபான்மை யாக இருக்கும் ஐ.தே.க. வுக்கு அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அனும திக்க முடியாது. அதேபோன்று 48 ஆசனங் கள் மாத்திரம் இருக்கும் கட்சி ஒருவருக்கு பிரதமராக இருப்பதற்கு அனுமதிக்க முடி யாது என்றார்.