பிரேமதாச காலத்திலும் பார்க்க இந்த அரசாங்கத்திலேயே அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கும் கைதுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.இதற்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட தீர்மானித்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
1800கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு அரசாங்கம் பொய்யான தகவல்களை குறிப்பிடுவது நாடுகடந்த தமிழீழ அமைப்பினரையும் பிரிவினைவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காகும் எனவும் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்,
மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்காக நாங்கள் ஜெனிவா செல்லவில்லை. ஜனநாயக நாடொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக முறையிடக்கூடிய சர்வதேச பாராளுமன்ற சங்கத்துக்கே செல்லவுள்ளோம். இதன் தலைமையகம் ஜெனிவா நகரிலே அமைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் பிரேமதாச காலத்திலும் பார்க்க தற்பொழுது மீறப்படுகின்றன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவல கத்தின் முன்னால் பாராளு மன்ற உறுப்பினர் என்றவகையில் நான் கூடியிருந்த மக்களைப்பார்த்து உரை யாற்றியமையால் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்தில் கையெழுத் திடவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறான அராஜகம் பொலிஸ் ராஜ்ஜி யம் மற்றும் மனிதப்படுகொலைகள் இடம்பெறுகின்ற இடங்களைத் தவிர வேறு எந்த ஜனநாயக நாடுகளிலும் இடம்பெறு வதி ல்லை. இவ்வாறான முறைப்பாடுகளை தெரிவிக்கவே ஜெனிவாவுக்கு செல்கின் றோம். மேலும் இந்த அரசாங்கம் 30வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன் னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷ மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றது.
மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினரிடம் 1800கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக அரசாங் கம் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
உலகில் அதிக சனத்தொகையைக் கொண் ட இந்தியாவில் டாட்டா நிறுவனம் மற்றும் முகேஷ் அம்பானிக்கு மாத்திரமே இவ்வளவு பெறுமதியான சொத்துக்கள் இருக்கின் றன. நாடுகடந்த தமிழீழ கோரிக்கையாளர் கள் மற்றும் பிரிவினை வாதிகளை சந்தோசப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றது.
இதன்மூலம் நாடு கடந்த தமிழீழ கோரிக் கையாளர்கள் தங்களது தலைவர் பிரபாக ரனை கொலை செய்தது இவ்வாறான மோசடிக்காரர்தான் என உலகம் பூராகவும் ஊடகங்களினூடாக பரப்பிவருகின்றனர்.
எனவே இந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இடம் பெறக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கெதிராக வும் சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்வோம் என்றார்.