கிருலப்பனை மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொதுமன்னிப்பு ?

mahinda-maithri-970x623

 

சுதந்திரக்கட்சியின் மேதினக் கூட்டத்திற்குச் செல்லாமல் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

காலியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதினக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலர் வருகை தரவில்லை.

அதற்குப் பதிலாக அவர்கள் கிருலப்பனையில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

அவ்வாறானவர்களை கட்சியை விட்டும் நீக்குவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், கிருலப்பனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பொதுமன்னிப்பு ஒன்று வழங்கப்படும் சாத்தியம் உள்ளது.

இந்த விடயத்தில் கட்சியின் மத்திய செயற்குழுவே என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். எதிர்வரும் சில நாட்களுக்குள் மத்திய செயற்குழு இது தொடர்பில் கூடி முடிவெடுக்கவுள்ளது.

அந்த வகையில் கிருலப்பனை மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை தற்போதைக்கு உறுதியாக தெரிவிக்க முடியாதிருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.a