ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தக்கூடாது, இந்திய மண்ணில் தான் நடக்க வேண்டும் என்று கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
வறட்சி காரணமாக மராட்டியத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளை மே 1–ந்தேதிக்கு பிறகு வேறு இடத்துக்கு மாற்ற மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இனிவரும் ஐ.பி.எல். தொடர் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என்று கருத்து நிலவுகிறது.
இது தொடர்பாக கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் கூறுகையில், கிரிக்கெட்டை இந்தியாவில் அதிகபட்சம் பேர் பார்க்கிறார்கள். அதன்மூலம் வர்த்தகமும் நடக்கிறது. ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் போட்டிகள் இங்கே தான் நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வசதிக்கு ஏற்ப போட்டிகள் இந்திய மண்ணில் தான் நடக்க வேண்டும் என்றார்.