வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

wimal vimal

குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை மீறி போலி கடவுச்சீட்டை தன்வசம் வைத்திருந்தமை, அந்த போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட உள்ளது.

இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அடுத்த சில தினங்களில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச அணியில் முன்னணி செயற்பட்டாளரான விமல் வீரவன்ஸ, போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த போது குடிவரவு குடியல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

இவரை விடுதலை செய்வதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.