சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை சிறப்பிக்க அணைவரும் ஒன்றுக்கூட வேண்டும்:நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன

க.கிஷாந்தன்

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை கடந்த ஆறு மாதகாலமாக இடம்பெற்று வந்தது. இந்த யாத்திரை காலம் எதிர்வரும் (22.05.2016) வெசாக் போயா தினத்தன்று முடிவுபெறவுள்ளது.

DSCF1834_Fotorஇந்த யாத்திரை காலத்தில் நடாளாவீய ரீதியில் மற்றுமல்லாது வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளும் தரிசனத்திற்காக வந்து சென்றுள்ளனர்.

இந்த யாத்திரை காலப்பகுதியில் பொதுமக்களின் அனைத்து தேவைகளுக்கும் உதவி கரம் நீட்டிய பொலிஸார், ஊடாகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் உள்ளிட்ட குடிநீர் வழங்கல் சபை மற்றும் போக்குவரத்து சபைகள் அடங்களாக சுகாதார சேவை பிரிவினர் அணைவருக்கும் இன்று நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் நிறைவுபெறுவதை முன்னிட்டு, சிவனொளிபாமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் விசேட கூட்டம் ஒன்று 06.05.2016 அன்று நல்லதண்ணியில் அமைந்துள்ள கிராம சேவகர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் மேற்குறித்த அனைத்து திணைக்களங்களையும் சேர்ந்த அதிகாரிகள் உட்பட அம்பகமுவ பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நன்றி தெரிவித்து உரையாற்றிய நாயக்க தேரர் தெரிவித்ததாவது,

இம்முறை இடம்பெற்ற சிவனொளிபாதமலை யாத்திரை காலம் முடிவடையும் தருணத்தில் இருக்கும்போது அதிகமான ஜன திரள் வந்து சென்றமை பெருமையை அளிக்கின்றது.

இவர்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் இடம்பெற்றிருக்கலாம். குடிநீர், மலசலகூடம் வசதிகள், போக்குவரத்து இடையூறு போன்ற பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுத்திருக்கலாம்.

DSCF1836_Fotor

ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை வரவிடாமல் முன்கூட்டியே ஆலோசனைகள் மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு இந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை சிறப்பிக்க அணைவரும் ஒன்றுக்கூட வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.