ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் அரசியல் நகர்வுகள் சிலரை குழப்பியிருக்கிறது – பஹீஜ்

1 atha

 

தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் அரசியல் நகர்வுகள் சிலரை குழப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களை விமர்சிப்பவர்களை பின்வருமாறு வகைப்படுத்;தலாம்

1. அவரின் அரசியல் கோட்பாடுகளில் உடன்பாடற்றோர்

2. அவருடன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டோர்

3. அவருடன் இருந்து அவருக்காக உழைத்து அவரிடம் அனுபவித்துவிட்டு சில காரணங்களினால் விலகியிருப்போர்

4. அக்கரைப்பற்றில் அரசியல் அதிகாரம் இருப்பதை விரும்பாதோர்.

பாராளுமன்ற தேர்தல் தோல்வியோடு அதாஉல்லாவின் அரசியல் முடிந்துவிட்டது என சந்தோஷத்தில் இருந்தவர்களுக்கு கட்சியின் பேராளர் மாநாடும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் காலியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைமைக்கு கிடைக்கப்பெற்ற கௌரவமும் மீண்டும் கிலேசத்தை ஏற்படுத்;தியுள்ளது.

இதனால் மீண்டும் மஹிந்த புராணம் பாடுகின்றனர்.

ஒரு கதை:
ஒரு பாடசாலையில் ஒரு அதிபர் ஒரு பிரதி அதிபர் பல பகுதித் தலைவர்கள் இருந்தார்கள். 

எல்லோரும் அதிபரின் கீழ் பணிபுரிந்தனர். 

திடீரென பிரதி அதிபர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கேட்டு சென்றார். தொடர்ந்தும் பகுதித் தலைவர்கள் அதேஅதிபரின் கீழ் பணிபுரிந்தனர்.

சில மாதங்களில் இடமாற்றம் கேட்டு சென்ற முன்னாள் பிரதி அதிபர் அதே பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்படுகிறார்.

முன்னாள் அதிபர் விருப்பமில்லாமல் ஓய்வு பெறுகிறார். ஆயினும் சில பெற்றோர் அவரே மீண்டும் பாடசாலையை நிர்வகிக்க வேண்டும் என கோருகின்றனர். சில ஆசிரியர்களும் பகுதித் தலைவர்களும் அதற்கு உடந்தை. 

ஆனால் சில பகுதித் தலைவர்கள் புதிய அதிபருடன் பணியாற்ற தீர்மானித்து பணிகளைத் தொடர்கின்றனர். குறித்த பகுதித்ததலைவர்கள் இதற்கு முந்திய அதிபர் மாற்றத்தின்போதும் அப்படியே செய்தனர்.

அதிபர்கள் மாறியிருக்கிறார்கள். ஆசிரியர்களும், பகுதித்தலைவர்களும் அதே பாடசாலையில்தான் உள்ளார்கள். 

நமது கதை நாயகனான பகுதித் தலைவர் பாடசாலையின் அதிபராக வருகின்றவரோடு பணிபுரிவதற்கு பழகியவர்.

கதை புரியும் என நினைக்கிறேன்.

வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.

 
எம்.எம்.பஹீஜ் 
   baheej