அம்பாறையில் ‘சிங்க லே’ அமைப்பின் அச்சுறுத்தல் (புகைப்படம் இணைப்பு )

ஆர். நஜா

 

முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கையைக் கண்டித்து அம்பாறை மாவட்ட செயலகம் முன்காப இன்று(05)கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சிங்ஹல றாவய என்றழைக்கப்படும் அமைப்பின் கும்பலலொன்று அச்சுறுத்தல்விடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வட்புறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பதட்டமானதொரு நிலைமை ஏற்பட்டது.

01 (2)_Fotor
காணாமல் போனவர்களினுடைய குடும்பங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கையைக் கண்டித்து அம்பாறை நகரில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் முதலாவது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட செயலாளரிடம் மகஜரை கையளிக்க இருந்த வேளையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது திடீரென வந்திறங்கிய கும்பொலொன்று சத்தமிட்டு அச்சுறுத்தல் விடுத்தது. இச்சம்பவத்தினையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை தோன்றியதுடன் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம். அமீரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டக்காரார்கள் கையளித்து வைத்து ஆhப்பாட்டக்காரர்களும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கும்பலும் அவ்விடத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

01 (7)_Fotor

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது.

எதிர்காலத்தில்; அவ்வாறான கைதுகள் இடம்பெறாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன் காணாமல் போனவர்களை தேடித்தருவதற்கான நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்படுக்கப்பட்டது.

01 (6)_Fotor
இவ்வாறிருக்க, இந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு ஆர்ப்பாட்டம் நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01 (9)_Fotor5