ஊடக அமைச்சின் செயலாளரை பணி நீக்கம் செய்வதில்லை என ஜனாதிபதி தீர்மானம்

maithripala srisena

 

ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவை பணி நீக்கம் செய்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்தை ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது என செயலாளர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் போபகேவை பணி நீக்கம் செய்யுமாறு சில அமைச்சர்கள் கோரியிருந்தனர்.

இதேவேளை, இனி வரும் காலங்களில் அரசியல் ரீதியான எவ்வித கருத்துக்களையும் அனுமதியின்றி வெளியிடப்பட போவதில்லை என போபகே பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த உறுதி மொழியின் அடிப்படையில் போபகேவை பணி நீக்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.