பாராளுமன்றில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட செயலென ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
கூட்டு எதிரணியினர் பாராளுமன்றில் பிரச்சினைகளை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர் என அவர் குற்றம்சுமத்தினார்.
இதேவேளை, அவை அனைத்திற்குமான சாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசுக்கு சார்பாக நடாத்தப்பட்ட மே தின கூட்டங்களில் அனைத்துக் கட்சிகளும் வெற்றி பெற கூட்டு எதிரணியினர் தமது தோல்வியை ஏற்க முடியாது மன உளைச்சலில் இருப்பதே இந்த இவ்வாறான செயல்களுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் அனைத்து கேள்விகளுக்கும் பிரதமர் சரியான பதிலை வழங்கினார் என அமைச்சர் கயந்த கூறினார்.
இந்தநிலையில், மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் மேலதிக விளக்கங்களை அளிக்கவே அமைச்சர் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.