யுத்த நேரத்தில் நாட்டை விட்டு சென்றவர்கள் பயமின்றி இலங்கைக்கு வரலாம் – பிரதமர்

ranil wickramasinghe_Fotor

 

நாட்டை விட்டு சென்றவர்கள் அனைவரும் மீண்டும் இங்கு வந்து வாழும் சூழல்அமைத்துக் கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தவின் உரைக்குபதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். 

அத்துடன், தமிழ் நாட்டில் அகதிகளாக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை சென்னையிலுள்ள இலங்கை தூதுவராலயம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார். 

மேலும் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ்பத்திரமின்றி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தெரிவித்தார். 

இவர்கள்பற்றிய தகவல்களை தெரிவித்தால் அவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்எனவும் பிரதமர் தெரிவித்தார். 

இதேவேளை, யுத்த நேரத்தில் நாட்டை விட்டு சென்றவர்கள் மற்றும் அகதிகளாக நாட்டைவிட்டு சென்றவர்கள் பயமின்றி இலங்கைக்கு வரலாம் என்றும் தெரிவித்த பிரதமர் அகதிகளாக சென்றுள்ளோர் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதன் பொருட்டு அவர்களுக்கு தேவையான கடவுசீ்ட்டு உள்ளிட்டவற்றை சட்டரீதியாக வழங்குவதற்கான நடவடிக்கையைஇலங்கையின் குடிவரவு,குடியகழ்வு திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.