தகவல் அறியும் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு முரணானவை – உச்ச நீதிமன்றம்

Supreme-Court-building

 

தகவல் அறியும் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் சானத்திற்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது. இந்த விடயத்தை சற்று நேரத்திற்கு முன்னதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

 
தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

 
இது தொடர்பிலான சட்ட விளக்கத்தை உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது. அந்த சட்ட விளக்கத்தை சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.