ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பது அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் எனவும், அதற்கான பிரதிபலன்களை அனுபவிக்கும் நேரம் தற்போது உருவாகியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பொரளையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து பாராளுமன்றத்தை ஒரு அரசாங்கமாக மாற்ற எழுந்த சவால்களுக்கு எளிதான முறையில் முகம் கொடுக்க முடிந்ததாகவும், இதன்மூலம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடிந்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை நிறைவடையச் செய்து ஊழலை ஒழித்து நாட்டை நல்ல எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பயணம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே அந்தந்த கட்சிகளின் கொள்ளை மற்றும் கோட்பாடுகளை அடியொற்றி செயற்படுவதோடு, நாட்டின் பொதுப் பிரச்சினை தொடர்பிலும் ஒன்றிணைந்து செயறபடுமாறும், பிரச்சினைகளுக்கு இவற்றின் மூலம் மட்டுமே தீர்வு காண முடிவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் வெட் குண்டை பற்றவைத்துள்ளதாக, சில ஊடகங்களில் குற்றம்சாட்டப்பட்டதாக இங்கு தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அத்தியவசிப் பொருட்களுக்கு வெட் வரியை விலக்களித்ததும் இந்த அரசாங்கம் என்பதை நினைவில் கொள்க என சுட்டிக்காட்டியுள்ளார்.