தேசியப்பட்டியல் 25 கோடிக்கு ஏலம்

tree-chair_Fotor

 

எம் குரல் வளைகளில் கத்தியும், தலைகளில் துப்பாக்கியும் வைக்கப்பட்டு எம் உயிர்களும் உடமைகளும் உத்தரவாதமற்று, நிர்கதியாக்கப்பட்டுக்கிடந்த ஓர் பயங்கரமான காலகட்டத்தில் எம் சமூகம் விடுதலையடைய வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் விமோசனம் பொறவேண்டும்  சுபிட்சம் அடையவேண்டும் எனும் மிகப் பெரும் கனவுகளுடன் எம் மீது விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் தகர்த்தெரிந்து உயிர்களை இழந்து உதிரம் சிந்தி எம் சமூகத்தின் கம்பீர காவலனாக கட்டி எழுப்பப்பட்ட எமது கட்சி இன்று பதவி மோகத்தால் பதராகி, பண வலைக்குள் சிக்குண்டு பாராளுமண்ற ஆசனங்ளை ஏலம் விடும் கட்சியாக மாறியுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் எதிரும் புதிருமாக களத்தில் நின்ற மாற்றுக்கட்சிக்காரரால் தலைமையகத்தில் வைத்து எமக்கான தேசியப்பட்டியலுக்கு இறுதியாக கோரப்பட்ட கேவில்த்தொகை 25 கோடி.

 போராளிகள் புடைசூண்டு , நோயாளி, வயோதிபர் என்று பாராது நாம் அனைவரும் திரண்டெழுந்து அளித்த வாக்குப்பலத்தால் எமக்காக கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமண்ற உறுப்புரிமை இன்று விலை மனுக்கோரி ஏலம் போகும் அளவிற்கு கீழத்தரமாக்கப்பட்டுள்ளது.

இதுவா எமது சக்தி?
இதற்காகவா நாம் வாக்களித்தோம்?
இன்னும் சில நாட்களில் பல உன்மை நிகழ்வுகள்.

பாபாஜி

junaid baba