கதாபி மற்றும் பஷர் அல் அஸாத்தைப் போல் துருக்கியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றாரா எர்டொகன்?

turkey erdukan

 

செழு­மை­மிக்க லிபி­யாவை முஅம்மர் கதாபி அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கட்­டாந்­த­ரை­யாக்­கி­யது போல், தன்­னு­டைய கொடூரமிக்க ஆட்சி அதி­கா­ரத்தை தக்கவைத்துக் கொள்­வ­தற்­காக செழிப்­பான சிரியாவை அந்த நாட்டின் கசாப்புக் கடைக்­காரன் என வர்­ணிக்­கப்­படும் பஷர் அல் அஸாத் இரத்த ஆறாக மாற்­றி­யது போல் வர­லாற்றுப் புகழ்­மிக்க துருக்கி தேசத்­தையும் அந்த நாட்டின் ஜனா­தி­பதி தய்யிப் எர்­டொகன் அழிவை நோக்கி இட்டுச் செல்­கின்­றாரா? 

மக்­களின் குரலை நசுக்­கு­வ­தற்­காக இன்று ஜனா­தி­பதி எர்­டொகன் கடைப்­பி­டிக்கும் கடும்­போக்கு கொள்­கைகள் எழுப்­பி­யுள்ள பிர­தான கேள்வி இதுதான். கடந்த சில நாட்­களில் அந்த நாட்டின் ஊட­கங்­களை நசுக்கும் வகையில் அதி­ர­டி­யான சில நடை­மு­றை­களை அவர் அறி­முகம் செய்­துள்ளார். 

துருக்­கியின் இஸ்­லா­மியப் போத­கரும் கல்­வி­மா­னு­மான பதுல்லாஹ் குலென் தொடங்­கிய குலென் இயக்கம் என மக்கள் மத்­தியில் பர­வ­லாக அறி­யப்­பட்ட இயக்­கத்தின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு எதி­ராக அடக்­கு­மு­றைகள் பிர­யோ­கிக்­க­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த பல கால­மாக இது நடந்து வந்­தாலும் அண்­மைய நாட்­களில் இது மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

2016 ஏப்ரல் 19 செவ்­வாய்க்­கி­ழமை அன்று நாடு தழு­விய நட­வ­டிக்­கையின் போது சுமார் நூறு பேர் வரையில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். தமது வீடு­க­ளிலும் அலு­வ­ல­கங்­க­ளிலும் இருந்­த­வர்கள் அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையின் போது அர­சுக்கு எதி­ராக அமை­தி­யீ­னத்தை தூண்ட முயன்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­டார்கள்.

ஆயி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ரா­கவும் துருக்கி கடும் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. இஸ்­லா­மிய சார்பு அரசு என கூறப்­படும்.

ஆனால் சர்­வா­தி­காரப் போக்கு மேலோங்கி வரும் எர்­டொ­கனின் ஆட்­சிக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­வர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த நட­வ­டிக்­கைகள் அழி­வுக்கு இட்டுச் செல்­பவை. லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடு­களின் நிலை­மை­க­ளி­லி­ருந்து அவர் பாடம் கற்றுக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

ஜன­நா­ய­கத்­துக்கும் சுதந்­தி­ரத்­துக்­கு­மான மக்­க­ளது குரல்கள் நசுக்­கப்­பட்­டதால் அந்த நாடுகள் அழி­வுப்­பா­தைக்கு இட்டுச் செல்­லப்­பட்­டன.

2010 டிசம்பர் 18இல் டூனீ­ஷி­யாவில் தொடங்­கிய அரபு எழுச்சி பாரிய அள­வி­லான அர­சியல் மாற்­றங்கள் பல­வற்றை ஏற்­ப­டுத்­தி­யது. இதனால் உந்­தப்­பட்ட லிபிய மக்­களும் சிறிய அளவு சுதந்­திரம் வேண்டி அமை­தி­யான ஆர்ப்­பாட்­டங்­களைத் தொட ங்­கினர். 

அவர்கள் கதா­பியின் ஆட்­சியைக் கவிழ்க்க வேண்­டு­மென்று எண்­ண­வில்லை. மக்­க­ளுக்குப் பல்­வேறு பொரு­ளா­தார நன்­மை­களை வழங்­கிய அந்த அடக்­கு­முறை ஆட்­சிக்கு அச்­சு­றுத்­த­லாக அவர்கள் அமை­யவும் இல்லை. ஆனால் கதாபி அந்த மக்கள் குரலை அடக்க திட­சங்­கற்பம் பூண்டார். அவரின் அடக்­கு­முறை நட­வ­டிக்கை கார­ண­மா­கத்தான் அங்கு அர­சுக்கு எதி­ரான ஆயுத மோதல் தலை­தூக்­கி­யது. இப்­படி ஒரு நிலை­மைக்­காக நீண்ட நாட்கள் காத்­தி­ருந்த அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா இஸ்ரேல் உட்­பட யுத்த வெறி­கொண்ட பல நாடுகள் நிலை­மையை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி புகுந்து விளை­யாடத் தொடங்­கின. 

மக்­களைக் காப்­ப­தாகக் கூறிக் கொண்டு கள­மி­றங்­கிய அவர்கள் ஆபி­ரிக்­காவின் செழு­மை­மிக்க ஒரு நாட்டை இன்று எது­வுமே அற்ற கட்­டாந்­தரையாக்­கி­விட்­டனர். 

இன்று லிபியா சட்டம், ஒழுங்கு எது­வுமே அற்ற வெறும் கொலைக்­க­ள­மா­கி­விட்­டது. அங்­கி­ருந்த 140 தொன் தங்கம் உட்­பட எண்­ணற்ற பல செல்­வங்­களை இஸ்­ரேலும் ஏனைய யுத்த வெறி­யர்­களும் சூறை­யா­டி­விட்­டனர்.

இந்தப் போராட்­டத்தின் நடுவே பிரான் ஸின் அப்­போ­தைய ஜனா­தி­பதி நிக்­கலஸ் சர்­கோஸி, கதா­பிக்கும் தனக்கும் இடை­யி­லான சட்­ட­வி­ரோத கொடுக்கல் வாங்­க ல்­களை மூடி மறைப்­ப­தற்­காக தனக்கு விசு­வா­ச­மான ஒரு உள­வா­ளியை அனுப்பி கதா­பியை பின்­தொ­டரச் செய்து சரி­யான சந்­தர்ப்­பத்தில் அவரை கொன்­று­விட்டார்.

லிபியா போராட்­டத்தின் ஆரம்­பத்தில் அதனால் உந்­தப்­பட்ட அடக்­கு­மு­றைக்கும் கொடு­மைக்கும் முகம் கொடுத்துக் கொண்­டி­ருந்த சிரியா மக்­களும் அமை­தி­யான முறையில் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்கத் தொடங்­கினர். பஷர் அல் அஸாத்தின் மூர்க்க குணம் கொண்ட இர­க­சிய புல­னாய்வுப் பிரி­வி­னரால் கடத்திச் செல்­லப்­பட்ட தமது அன்­புக்கு உரி­யவர்க­ ளுக்கு என்ன நடந்­தது என்­பது தான் அவர் கள் எழுப்­பிய பிர­தான கேள்வி.

அந்த மக்­களின் நியா­ய­மான குரல்­க­ளுக்கு செவி சாய்ப்­ப­தற்கு பதி­லாக பஷர் அல் அஸாத்தும் ஆள்­க­டத்தல், சித்­தி­ர­வதை, கொலை என மக்­க­ளுக்கு எதி­ராக மூர்க்­கத்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை கட்­ட­விழ்த்­து­விட்டார். அவர் கட்­ட­விழ்த்து விட்ட காட்­டு­மி­ராண்­டித்­த­னத்­துக்கு ரஷ்­யாவும் ஈரானும் துணைக்கு வந்­தன. அப்­போது மனித உரி­மையின் காவ­லர்­க­ளாக கொக்­க­ரிக்கும் அமெ­ரிக்கா, பிரிட்டன், உட்­பட பல நாடு­களும் நக­ரங்­களும் கண்­மூடி இவற்றை கண்டுகொள்­ளாமல் விட்­டு­விட்­டன. சிரி­யாவில் போரா­டிய எதி­ரா­ளி­க­ளுக்கு சவூதி அரே­பியா துணை­யாக நின்­றது.

இன்று சிரி­யாவும் மக்கள் வாழ விரும்­பாத ஒரு வெற்று பூமி­யா­கி­விட்­டது. துருக்­கியில் இன்று ஏற்­பட்­டுள்ள அமை­தி­யீ­னத்தை கட்டுப்­ப­டுத்த ஜனா­தி­பதி எர்­டொகன் எடுத்து வரும் நட­வ­டிக்­கை­களும் இந்த நிலை­மை­க­ளுக்கு ஒத்­த­தா­கவே உள்­ளன. கதா­பியும் அஸாத்தும் கடை­ப்பி­டித்த கொள்­கைகளுக்கு ஒத்­த­தா­கவே இவை காணப்­ப­டு­கின்­றன.

எர்­டொ­கனின் நெருங்­கிய உற­வி­னர்­களின் ஊழல்­களை ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்த தொடங்­கி­யதும் அந்தக் கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்க்க அவர் மறுத்­துள்ளார். மாறாக, ஊட­கங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டி க்­கை­களை அவர் முடுக்­கி­விட்­டுள்ளார். சில

ஊடக நிறு­வ­னங்­களை மூடி­வி­டு­மாறு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளமை அங்கு அச்ச நிலை யைத் தோற்­று­வித்­துள்­ளது.

துருக்­கியில் ஏற்­பட்ட ஆட்சி மாற்றம் துருக்­கி­யர்கள் மத்­தியில் மட்­டு­மன்றி முழு உல­கிலும் முஸ்­லிம்கள் மத்­தியில் மகிழ்ச்­சியைக் கொண்டு வந்­தது. 

துருக்­கியில் இஸ்­லாத்தை அழித்­தொ­ழிக்க சங்­கற்பம் பூண்டு அங்கு இஸ்­லாத்­து க்கு எதி­ராக யுத்தப் பிர­க­டனம் செய்த அந்த நாட்டின் தேச­பிதா என வர்­ணிக்­கப்­படும், ரோமா­னிய யூத­ராக இருக்­கலாம் என்றும் சந்­தே­கிக்­கப்­படும் முஸ்­தபா கமால் அதாதுர்க் என்­ப­வரால் அறி­முகம் செய்­யப்­பட்ட கொடு ங்கோல் ஆட்சி முறைக்கு முடிவு காணப்­பட்­டது என்­பதே இந்த மகிழ்ச்­சிக்குக் காரணம்.

அண்மைக் காலத்தில் உலகில் இஸ்லாம் மீள் எழுச்சிபெறத் தொடங்­கி­யுள்­ளது. வர­லா ற்றுப் புகழ்­மிக்க துருக்கி தேசம் மீது உலக முஸ்­லிம்கள் கொண்­டுள்ள ஆர்வம் கார­ண­மா­கவும் இஸ்­லாத்தின் கடைசி ராஜ்­ய­மாக எஞ்­சி­யி­ருந்த துருக்கி பேர­ரசின் நினைவுச் சின்­னங்­களைப் பார்­வை­யி­டு­வ­த ற்­கா­கவும் முஸ்­லிம்கள் பலர் அங்கு வருகை தரவும் தொடங்­கினர்.

அதேபோல் சிரி­யாவில் அழி­வு­களை எதிர் ­நோக்­கிய ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களும் வேறு வழி­யின்றி துருக்கி நோக்கி இடம்­பெ­யரத் தொடங்­கினர். இதனால் துருக்­கியின் அர­சியல் நிலை­வரம் இர­வோடு இர­வாக மாற்றி அமைக்­கப்­பட்­டது. இப்­போது துருக்கி இந்தப் பிராந்­தி­யத்தில் கொந்­த­ளிப்பு மிக்க ஒரு தேச­மா­கவும் மாறி­விட்­டது.

இவ்­வா­றான சிக்­க­லான ஒரு பின்­ன­ணி­யில்தான் ஜனா­தி­பதி எர்­டொகன், குலென் இயக்­கத்­துக்கு சவால் விடுக்கத் தொடங்­கி­யுள்ளார். கல்வி, தர்ம காரி­யங்கள், ஊட­கப்­பணி என பல்­வேறு மனி­தா­பி­மான சமூக சேவை­களில் ஈடு­பட்டு வரும் இந்த இயக்­கமே தற்­போது அரசின் நெருக்­கு­தலை எதிர்­நோக்­கி­யுள்­ளது.

தமது குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான ஊழல்­ களை வெளி­யிட்­டார்கள் என்­பதற்காக ஊட­

கங்கள் மீது அவர் கைவைத்­தி­ருப்பது தற்­கொ­லைக்கு சம­மா­ன­தாகும். ஆப்­கா­னிஸ் தான், ஈராக், சிரியா, லிபியா, பொஸ்­னியா, கொசோ­வோவா, சூடான், சோமா­லியா என பல முஸ்லிம் நாடு­களை வரி­சை­யாக வேட்­டை­யாடி சீர­ழித்த யுத்த வெறி­கொண்ட கழு­கு­க­ளான அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இஸ்ரேல் என்­பன துருக்­கி­யையும் துவம்சம் செய்யும் சந்­தர்ப்­பத்­துக்­காக காத்­தி­ருக்­கின்­றன.

தற்­போ­தைய நிலை­மைகள் பற்றி குலென் நிலை­யத்தின் பணிப்­பாளர் சபை உறுப்­பி­னரும் பகி­ரப்­பட்ட விழு­மி­யங்கள் கூட்­ட­மை ப்பின் தலை­வ­ரு­மான கலா­நிதி லு.எல்ப் எஸ்­லொங்­கடன் கருத்து வெளி­யி­டு­கையில்: 

“எர்­டொ­கனின் ஆட்­சியை கவிழ்த்து அரசை கைப்­பற்ற சதி செய்­வ­தாக பதுல் ­லாஹ்வை பின்­பற்­று­கின்­ற­வர்கள் மீதும் அவ­ருக்கு ஆத­ர­வாக செயற்­படும் பதுல் லாஹ் பயங்­க­ர­வாத அமைப்பு என அர­சாங்­கத்தால் பெய­ரி­டப்­பட்­டுள்ள சமாந்­தர அரச கட்­ட­மைப்பு ஆத­ர­வா­ளர்கள் மீதும் குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ள­தாக தற்­போது அஞ்­ஞா­த­வாசம் இருந்து வரும் சமயப் போதகர் பதுல்லாஹ் தெரி­வித்­துள்ளார்.

எர்­டொகன் பத­விக்கு வந்­த­போது பதுல் லாஹ் அவரின் தீவிர ஆத­ர­வா­ள­ரா­கவே இருந்தார். ஆனால் அதி­க­மாக ஊழல்கள் இடம்­பெற்று 2013இல் அவை பற்­றிய தக­வல்கள் மற்றும் அரசின் சட்­ட­பூர்­வ­மற்ற செயற்­பா­டுகள், முறை­கே­டுகள் இய­லாமை என்­பன வெளி­வரத் தொடங்­கி­யதும் இரு­வ­ருக்கும் இடையில் கருத்து வேறு­பா­டுகள் தலை­தூக்­கின. அதனைத் தொடர்ந்து புல­னாய்வுப் பிரிவு உயர் அதி­கா­ரிகள் மீதும் ஏனைய இர­க­சிய பொலிஸ் பிரிவு உயர் அதி­கா­ரிகள் மீதும் இந்த ஊழல்­களை வெளி­யிட்­ட­தாகக் கூறி தற்­போது வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. 

சதி முயற்­சி­யொன்றில் இணைந்து பணி­யாற்­றி­ய­தாகக் கூறி குலென் மீதும் வழக்குத் தொட­ரப்­பட்டு அவர் இல்­லா­ம­லேயே விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு அவ­ருக்கு ஆயுள் தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

வெற்­றி­க­ர­மான தொழிற்சார் நிபு­ணர்கள், வர்த்­த­கர்கள், பேரா­சி­ரி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் மாண­வர்கள் என குலெ­னோடு இணைந்து பணி­யாற்­றிய பலர் வழ­மை­யான நெருக்­கு­தல்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர். இவர்கள் மீது குலென் கொண்­டுள்ள ஆளு­மையும் செல்­வா

க்கும் விமர்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பெரு ம்­பாலும் இது ஒரு சர்ச்­சைக்­கு­ரிய சமயப் பிரிவைப் போல் காட்­டப்­பட்டு வரு­கின்­றது.

இதே­வேளை, குலென் மற்றும் அவரின் ஆத­ர­வா­ளர்கள் ஜனா­தி­பதி எர்­டொக னால் பலிக்­க­டாக்கள் போல் பயன்­படுத்தப்பட்டு வரு­கின்­றனர் என்று தான் நம்­பு­வ­தாக எஸ்­லொங்­கடன் கூறுகின்றார். இவற்றின் விளை­வாக துருக்கியில் நீடிக்கும் துயரங்கள் துருக்கி சமூகத்தில் பாரிய அளவில் மனிதா பிமான நெருக்கடிக்கு வழியமைப் பதாகவும் அவர் தெரிவித்து ள்ளார்.

துருக்கியில் ஒட்டுமொத்தமாக அடிப் படை சுதந்திரத்தின் நிலை மிக மோசமான கட்டத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவே எஸ்லொங்கடன் தெரிவித்துள்ளார். துருக்கியின் வரலாற்றில் மிக முக்கியமான இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி எர்டொகனுக்கு தேவைப்படுவது மக்களின் ஒருமித்த ஆதரவு. 

முன்னொரு போதும் இல்லாத பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் அந்த நாடு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்கள் ஓரணியில் அவர் பின்னால் திரண்டிருக்க வேண்டியதே மிகவும் அவ சியமானதாகும்.

இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி ஒரு சிறு குழுவைக் கூட பகைத்துக் கொள்வது இந்த நாட்டை அழிவைநோக்கி இட்டுச் செல்லும் தற்கொலை முயற்சியாகவே கரு தப்படும். 

சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம் நாடான துருக்கியில் அழிவை ஏற்படுத்தி அதன் வளங்களைச் சூறையாடி அந்த நாட்டையும் வெற்று பூமி யாக்க காத்திருக்கும் சக்திகளிடம் இருந்து துருக்கி தேசம் பாதுகாக்க ப்பட வேண்டும்.

 
லத்தீப் பாரூக்
நன்றி – வீரகேசரி