க.கிஷாந்தன்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிறசங்கம் மற்றும் அரசியல்வாதிகளினால் இழுபறி நிலையில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் உலக தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி (01.05.2016) நாடாளவீய ரீதியில் வைபவங்களாக முன்னெடுப்பட்டது.
தொழிலாளர் தினத்தில் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள உயர்வை உரிய வேளையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அதற்கான ஒப்பந்தத்தை கைச்சாதிடபடியும் அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும் என கோரி 01.05.2016 அன்று அட்டன் நகரில் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக ஒரு மணி நேர போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட தோட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய சிவில் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்து செய்தனர்.
இதன்போது போராட்டகாரர்கள் கறுப்பு பட்டி அணிந்து பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த சிவில் அமைப்பினால் எழுதப்பட்ட மகஜர் ஒன்றினையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.