இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வை எதிர்வரும் மே முதலாம் திகதி நுவரெலியாவில் நடத்த சகர ஏற்பாடுகளும் நடற்தேறியுள்ளது.
இம் மேதின நிகழ்வு பொலிஸில் பதிவு செய்யப்பட்ட இடத்தில் நடத்துவதற்கு நுவரெலியா பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர் இருந்தும் இம் மேதின நிகழ்வு எந்தவொரு தடையும் இன்றி நுவரெலியாவில் இடம்பெறும் என இ.தொ.கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இ.தொ.கா தனது மேதின விழாவை நுவரெலியாவில் பலமுறை நடத்தியுள்ளது. நுவரெலியா நகரின் பிரதான வீதி ஒன்றை மறைத்து இந்த நிகழ்வினை வழமைபோல் நடாத்த இம்முறையும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில் இதற்கென முன்கூட்டியே நுவரெலியா பொலிஸாரிடம் அனுமதியும் பெற்றுள்ளது. இருந்தும் ஆரம்பத்தில் அனுமதி வழங்கியுள்ள நுவரெலியா பொலிஸார் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக இந்த அனுமதியை மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரிடம் வினாவிய போது, அவர்கள் தெரிவித்ததாவது,
இது அரசியல் உள்நோக்கமாக அமைந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில் இ.தொ.கா தனது மேதினத்தை நுவரெலியாவில் நடத்த உறுதியுடன் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தது.
அத்தோடு 70ற்கும் மேற்பட்ட மேதின நிகழ்வுகளை நடத்தி தனது தனித்துவத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள பலம் பெரும் கட்சியாக மலையகத்தில் இ.தொ.கா திகழும் நிலையில் தொழிலாளர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் இதற்கு காரணமாகவே இருக்கின்றது.
இதுவரை இ.தொ.கா மலையகத்தில் நடத்திய கூட்டங்களில் இனியும் தோல்வி காணப்போவதும் இல்லை இக் கூட்டங்கள் அனைத்தும் மக்கள் சத்தியில் இடம்பெற்று வெற்றிக்கண்டுள்ளது என்பதை எமக்கு எதிராக செயற்படுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிடின் மக்கள் இதை இவர்களுக்கு உணர வைப்பார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.