தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் ஜெயலலிதா

jaya_310147f

 

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இன்று மதுரையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், 47 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, தி.மு.க.வையும், அக்கட்சியின் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:- 

2011ம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் நலன் கருதி திட்டங்களை செயல்படுத்துவது அ.தி.மு.க. அரசு. ஆனால், குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவர் கருணாநிதி. தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார், பொதுநலம் என்றால் அமைதி காப்பார். 

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வாக்குறுதியை கருணாநிதி நிறைவேற்றவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு போராடி வென்றது. அ.தி.மு.க. அரசின் முயற்சியால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. நான் வலியுறுத்தியதால் அணையை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அணையில் தண்ணீர் தேக்கும் அளவை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.