விழித்தெழுமா எம் ஊடகங்கள்? உடைத்தெறியுமா தடைகளை?

freedom_day_0_0_Fotor
கருத்துக்களை கருத்துக்களால் தோற்கடிக்க வக்கற்ற அரசியல் அரக்கர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு குரல் கொடுத்து வீதி ஆர்பாட்டம் செய்யும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஏன் அரசியல் அளுத்தங்களால் பேனாமுனைகள் அடக்கி ஒடுக்கப்பட்டு முடக்கப்படும் போது மெளனங்காக்கின்றனர்? இவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் தான் அவர்களால் உங்கள் வியாபார ஊடகங்கள் இலாபம் பெறுமா?

 
அந்த பிரபல தமிழ் அச்சு ஊடகத்திற்கு செயல்திறன் அற்ற அமைச்சுக்களை சுமந்த அரசியல் வாதியால் கொடுக்கப்பட்ட பலப்பிரயோகம் சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டார்களே தவிர கண்டன அறிக்கை வெளியிடாததன் மர்மம்தான் என்ன? கடந்த ஆட்சியில்தான் ஊடக சுதந்திரம் இல்லை என்றால் நல்லாற்சியிலும் மாற்றமில்லையா? இவர்கள்தான் அவர்களா? மக்கள் அரச பாதுகாப்பை விட ஊடக பதுகாப்பையே அதிகம் நம்பி இருந்தும் ஊடகங்களின் மொளனப்போக்கு ஊடகங்களையும் நம்பிக்கை அற்ற நிறுவனமாக்கி விட்டதாக என்னத்தோன்றுகிறது.

 
விழித்தெழுமா எம் ஊடகங்கள்?
உடைத்தெறியுமா தடைகளை?

 

 பா பா ஜி 

junaid baba