தேசியப் பட்டியல் நியமனம் ?

tree slmc
வடமாகாண சபை கூடி வருடங்கள் மூன்றாகியும் இன்னும் கன்னி உரை கூட ஆற்றாத ஆற்றல் அற்ற ஓர் அடியானை தேசியப்பட்டியல் ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்க்க அனுமாணித்திருக்குதாம் தலைமை.
மக்கள் பிரதிநிதியாக சேவை நலன் கருதி மாகாண சபைக்கு அனுப்பப்பட்ட இவர் தன் பதவியை தக்க வைத்துக்கொள்ள மூண்று மாதங்களுக்கு ஒரு முறை மாகாணசபை அமர்வுக்கு visit பண்ணிக்கொண்டு இன்று வரைக்கும் ஓர் பொது மேடையிலேனும் மக்கள் முன் பேசியதற்கான எந்தச்சான்றும் இல்லை.

 
முப்பது வருடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, வளங்கள் அழிக்கப்பட்டு, சொத்துக்கள் இழக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட வன்னி மக்களின் அபிலாசைகளை நிபர்த்தி செய்யக்கூடிய ஓர் பிரதிநிதியே மக்களின் தேவை ஆனால் மாறாக வன்னி மக்களின் தலைகளை தடாவி கண்களில் மிளகாய் ஊற்ற எத்தனிக்கிறது இத்தலைமை.

 
கிழக்கில் எடுத்த காவேடி இன்று வன்னியை மையம் கொண்டுள்ளது வாய் பேசா மடந்தைகளையும், தலையாட்டி பொம்மைகளையும், தலைவரின் இச்சைகளுக்கு முட்டுக்கொடுத்து உயர் ரக அண்பளிப்புக்கள் வழங்கும் பிணாமிக்களைக் கொண்டும் பாராளுமண்ற கதிரைகளை சூடாக்க விணையும் இத்தலைமையின் சாணாக்கிம் கண்டிக்கத்தக்கது.

 
ஏன் வன்னி மண்ணில் படித்தவர்களோ
ஆரோக்கிய அரசியலாளர்களோ எம் தலைமைக்கு புலப்பட வில்லையா?
மர்ஹும் அஸ்ரப்புடன் நம் தலைவர் வன்னி மண்ணையும் மர்ஹுமாக்கி விட்டாரா?
என்றல்லாம் வன்னி மக்கள் புலம்புவது கட்சிக்கு ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லை.

 

பா பா ஜி 

junaid baba