கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்கு திரும்ப கொண்டு வர முடியாது

201604270048384171_KohiNoor-cant-be-brought-back-to-Pak-Lahore-HC-told_SECVPF

 

கடந்த 1849–ம் ஆண்டு, இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள் தோற்கடித்தன. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சொத்துகளையும் கவர்ந்து சென்றன. அப்படி எடுத்துச் சென்ற பொருட்களில், பழமையான, பிரசித்திபெற்ற கோஹினூர் வைரமும ஒன்றாகும். ஒரு ஒப்பந்தம் மூலம், அது கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது அந்த 108 காரட் வைரத்தை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அணிந்து வந்தார்.

இத்தகைய பின்னணி கொண்ட கோஹினூர் வைரத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவில் அவ்வப்போது கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானிலும் சிக்கல் நிலவி வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் வைரத்தை சட்டப்படி திரும்ப பெற முடியாது என்று கூறியுள்ளன. பாகிஸ்தான் அரசின் முடிவை எதிர்த்து பர்ரீஸ்டர் ஜேப்பிரி என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அவர் தமது மனுவில், “மகாராஜா ரன்சீத் சிங்கின் பேரன் டால்தீப் சிங்கிடம் இருந்து இங்கிலாந்து வைரத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டது. கோஹினூர் வைரம் பஞ்சாப் மாகாணத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒன்று. உண்மையில் அது குடிமக்களுக்கு சொந்தமானது. மத்திய அரசு அதனை மீண்டும் பாகிஸ்தானுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோர்ட் அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, மகாராஜா ரன்சித் சிங் மற்றும் கிழந்திய கம்பெனி இடையிலான ஒப்பந்தத்தின் நகலை சமர்பிக்குமாறு பாகிஸ்தான் அரசின் கவுன்சிலுக்கு லாகூர் ஐகோர்ட் நீதிபதி காலித் மஹ்மூத் கான் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.