தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்கு 2 வருடங்கள் தடைவிதிக்கப்பட்ட நிலையில், டோனி தலைமையிலான புதிய அணியான புனே அணியில் இணைந்து ஆடி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய போட்டிகளில் அஸ்வினின் செயல்பாடு மோசமாக உள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் ரன்களை அள்ளிக் கொடுத்த அஸ்வின் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
இது குறித்து புனே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில், “எங்கள் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அஸ்வினின் செயல்பாடு ஏமாற்றமாக உள்ளது. அவர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முற்றிலும் ஏமாற்றினார்.
‘பவர் பிளே’ ஓவர்களில் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறுகிறார். அடுத்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ஆடுகளங்கள் கைகொடுக்காத நிலையில், பவுலர்கள் தங்களை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.