வட மாகாண சபையில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமக்கே உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என கூட்டு எதிரணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், வட மாகாண சபையையே தம்மால் கைது செய்ய முடியும். அவ்வாறு செய்வதனூடாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாது.
எவ்வாறாயினும், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே உரிமைகளை வென்றெடுத்து வாழ வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.