அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது

2_Fotor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 11.04.2016 அன்று ஏற்பட்ட விபத்தின் காரணமாக மரணமடைந்த ஒருவரது ஜனாஸா இன்று (25.04.2016) மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் கடந்த 11.04.2016ம் திகதி அன்று முச்சக்கர வண்டி மற்றும் துவிச்சக்கர வண்டி மோதுண்டதில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இப்றா லெப்பை கயாத்து முஹம்மது (வயது – 76) காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 12.04.2016ம் திகதி மரணமடைந்து 13.04.2016ம் திகதி வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

10_Fotor
குறித்த நபர் மரணமடைந்தற்கான காரணம் கண்டரியப்படவில்லை என்றும் மரணமடைந்தவரின் ஜனாஸா மருத்துவ பரிசோதனை செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் வாழைச்சேனை நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஃ நீதவான் ஏ.சி. றிஸ்வான் விடுத்த உத்தரவின் பேரில் இன்று ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது.

11_Fotor

 
வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஃ நீதவான் ஏ.சி. றிஸ்வான், பொலநறுவை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.டி.பி.பண்டார, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்கர் விதானகே மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடையியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சடலம் தோண்டப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக பொலநறுவை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.