இங்கிலாந்துக்கு எதிராக 20 பேர் கொண்ட உத்தேச இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

srilanka vs engl

 

இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் , 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியைக் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இத்தொடரின் ஆரம்பத்தில் நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து காலநிலையைக் கருத்திற் கொண்டு அந்த காலநிலைக்கு பழகும் வகையில்  20 பேர்கள் கொண்ட இலங்கை வீரர்கள் கண்டியில் பயிற்சிகளை பெற்று வருகிறார்கள்.

இங்கு அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட  உத்தேச அணியிலிருந்து, இறுதி 15 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் எதிர்வரும் 27ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டித் தொடரின்  தலைமைப் பதவி எஞ்சலொ மெதிவ்ஸிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவர் பதவி தினேஷ் சந்திமாலிற்கு  வழங்கப்பட்டுள்ளது. பழைய, புது முக வீரர்களைக் கொண்ட அணியாக இலங்கை அணி இங்கிலாந்து அணியைச் சந்திக்கவுள்ள நிலையில் பின் தொடையில் இருக்கும் தசை நார் உபாதை காரணமாக இடது கைத் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நீண்ட இடைவெளியின் பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரங்க பரணவித்தான அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா மற்றும் ஜெப்ரி வண்டேர்சே ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம்பிடிக்க தம்மிக்க பிரசாத், நுவன் பிரதீப் , துஸ்மந்த சமீர, கசுன் ராஜித்த ,சுரங்க லக்மால், சமிந்த எரங்க , விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அறிவிக்கப்பட்ட உத்தேச அணி விபரம்.

 

1.எஞ்சலொ மெதிவ்ஸ்  (தலைவர்)

2.தினேஷ் சந்திமல்  (உபதலைவர்)

3.திமுத் கருணாரத்ன

4.கவ்ஷல் சில்வா

5.குசல் மென்டிஸ்

6.தரங்க பரணவிதான

7.தனஞ்சய டீ சில்வா

8.மிலிந்த சிறிவர்தன

9.டசுன் சானக

10.நிரோஷன் டிக்வெல்ல

11.ரங்கன ஹேரத்

12.டில்ருவன் பெரேரா

13..ஜெப்ரி வண்டேர்சே

14.தம்மிக்க பிரசாத்

15.நுவன் பிரதீப்

16.துஸ்மந்த சமீர

17.கசுன் ராஜித்த

18.சுரங்க லக்மால்

19.சமிந்த எரங்க

20.விஷ்வா பெர்னாண்டோ