முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய அரசாங்கம் ஆதரவளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜை ஒருவரின் எதேனும் பிரச்சினை குறித்து உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு அழுத்தங்களுக்கு சர்வதேச அழுத்தங்களோ சர்வதேச தலையீடு மேற்கொள்ள இடமளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.