மனு பரிசீலனை !

kothaதன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தன்னை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, இன்று 13ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனனே அலுவிஹார மற்றும் சரத் அபா ஆகிய மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினாலேயே இந்த மனு பரிசீலிக்கப்படவிருக்கின்றது.

நிதி குற்றம் புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டமை சவாலுக்கு உட்படுத்தியே அவர், 11 ஆம் திகதி திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை, பொலிஸ் மா அதிபர், நிதி மோசடி விசாரணை பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட 44 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டள்ளனர்.

பிரதமரினால்  கடந்த  பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட 1901/20 வர்த்தமானி மற்றும் அதன் ஊடாக உருவாக்கப்பட்ட நிதி மோசடி விசாரணை பிரிவு ஆகியவற்றை வலிதற்றதாக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.