மோதுவதானால் மோதிப் பார்ப்போம் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இடைறுயூறு ஏற்படுத்தினால் அந்த இடையூறுகளுக்கு இடையூற்றை ஏற்படுத்தி மே தினக் கூட்டத்தை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சாலிகா மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கி பின்னா அதிகாரிகளுக்கு தேவையான வகையில், அதனை மறுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாலிகா மைதானத்தில் ஆரம்பித்து கிருலப்பனை லலித் அதுலத்முதலீ மைதானத்தில் கூட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் வெற்றிகரமான மே தினக் கூட்டமாக இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.