ரக்பி வீரர் வாசிம் தாஜூதீனின் கொலை விடயங்களை மறைத்த குற்றத்துக்காக நாரஹன்பிட்டிய முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ஆட்சியில் முக்கியமானவராக கருத்தப்பட்ட உதவி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவும் இந்தக் கொலை தொடர்பில் விடயங்களை வெளிக்கொணர இணங்கியுள்ளார்.
நாரஹன்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா கடந்த 19ம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் கிருலப்பனையின் முன்னாள் பொறுப்பதிகாரியின் மீதும் இந்தக் கொலை தொடர்பான விடயங்களை மறைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வாசிம் தாஜூதீனின் கொலையில் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் நம்பிக்கை கொண்டிருப்பதாக வாசிம் தாஜூதீனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்