இலங்கையில் மிகவும் குறைவான ஊதியம் கொண்ட இலங்கைத் தபால் திணைக்களத்தின் பத்து முக்கிய அதிகாரிகள் திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ள விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து தபால் பொதிகள் ஊடாக போதைப் பொருள் கடத்தப்படும் வழக்கம் நீண்டகாலமாக தொடர்கின்றது.
இதற்குத் துணை புரிந்த அதிகாரிகளே இவ்வாறு திடீர் செல்வந்தர்களாகி இருப்பதாகவும் அவர்களின் சொத்துக்கள் குறித்து ஆய்வொன்றை நடத்த வேண்டும் என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக்கும்பல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குறித்த அதிகாரிகள் காரணமாக தபால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டிள்ளனர்.
எனவே இது குறித்து அரசாங்கம் உரிய முறையில் விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.