ஆட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
நல்ல அரசாங்கம் குறித்து நாம் பேசும் போது, நம்முடைய எண்ணத்தில் சிபிஐ, சிவிசி மற்றும் நீதிமன்றங்கள் போன்ற நடுநிலையான நிறுவனங்களும் வருகின்றன. மேலும் யோசித்து பார்த்தால் இத்தைய நடுநிலை நிறுவனங்கள் இந்தியாவில் நல்ல அரசாங்கத்தை அறிவதற்கான ஒரு பகுதி.
கடந்த பிப்ரவரி மாதம் நாம் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் வளர்ச்சி 7-7.75 சதவீதமாக உள்ளது. அதனால், அடுத்த மூன்று ஆண்டு இடைவெளிக்குள் நாம் எதிர்பார்ப்பது 8-10 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்பது.
கம்யூனிஸ்ட் கட்சியால் நாட்டின் சிறந்த உள்கட்டமைப்பை வழங்க முடியும், முதலீடுகளை ஈர்க்க முடியும். மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
இந்தியாவும் சீனாவும் இருவேறு அரசாங்க முறைகளை கொண்டிருக்கின்றன. பொருளாதார ஆட்சியை பொருத்தவரை இந்தியாவிட சீனா சிறப்பாக உள்ளது.