போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அசாகிம் 

01_Fotor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று மதியம் 12.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக போதைவஸ்து பாவனை அதிகரித்து காணப்படுவதையடுத்து போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட உபாலி ஜயசிங்கவின் ஆலோசனையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகேயின் வழிகாட்டலில் பொலிஸார் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

05_Fotor
இன்று (23.04.2016) வாழைச்சேனை பிரதேசத்தில் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டு இருக்கிறார் என்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் பரிசோதகர் ரீ.மேனன் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒன்பது வகையான மாத்திரைகளும் கஞ்சா சிறிய கட்டு ஒன்றும் கைப்பற்றியுள்ளதாக உதவி பொலிஸ் பரிசோதகர் ரீ.மேனன் தெரிவித்தார்.

 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் இவர் யுத்தகாலத்தில் காயமடைந்து கடமை செய்யமுடியாது என்ற மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சம்பளம் பெற்று வரும் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிpல் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.