ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டும்: ஒபாமா

ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, அந்த நாட்டில் ஜூன் மாதம் 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்கிறது.

201604230538524314_European-Union-strengthens-Britain-says-Obama_SECVPF

இந்த கருத்து வாக்கெடுப்பில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார்.

இது தொடர்பாக மக்களை நேரில் கேட்டுக்கொள்வதற்காக அவர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி அவர் இங்கிலாந்தின் ‘டெய்லி டெலகிராப்’ நாளிதழில் கட்டுரை ஒன்று எழுதி உள்ளார். அதில் அவர் ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இருப்பதால், இங்கிலாந்து உலக அளவில் இடம் பிடித்திருக்கிறது என்றும், தன்னை வலிமை வாய்ந்த நாடாக உருவாக்கி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், தனது நாடு ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என்றுதான் விரும்புகிறார். எனவே ஒபாமாவின் இங்கிலாந்து பயணத்தை அவர் வரவேற்கிறார்.

ஆனால் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்று கூறி வருகிற லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இருக்க அமெரிக்கர்கள் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என சாடி உள்ளார்.