கோலியின் பெங்களூர் அணியிடம் போராடி தோற்றது தோனியின் புனே (வீடியோ)

dhoni kholi

 

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடிது

இப்போட்டியில் டாஸ் வென்ற டோனி, தனது அணி முதலில் பந்து வீசவுள்ளதாக அறிவித்தார். பெங்களூரு அணியில் கோலியும், ராகுலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். ராகுல், பெரேரா பந்து வீச்சில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கோலியும், டி வில்லியர்சும் இணைந்து புனே பந்து வீச்சை துவசம் செய்தனர். அதிலும் டி வில்லியர்ஸ் புனே பந்து வீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்தார். 

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். விராட் கோலி 47 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியை பிரிக்க டோனி மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதியாக பெரேரா வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில் 80 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே 83 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்சும் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்குள்ளாகவே இருவரும் புனே அணியை ஒரு வழி செய்துவிட்டனர். 

இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் எடுத்தது. புனே தரப்பில் பெரேரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் புனே அணி களமிறங்கியது. கடந்த போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த டூ பிளஸ்சிஸ் இந்த போட்டியில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பீட்டர்சன் காயம் காரணமாக ரன் எடுக்காமல் வெளியேறினார். முக்கிய வீரரான சுமித்தும் 3 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

இதனால் புனே அணி கடும் பின்னடைவை சந்தித்தது. கேப்டன் டோனியும், ரகானேவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடியதால் ரன் வேகம் குறைந்தது. அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில் ரகானே 60 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனியும் சிக்ஸ் அடிக்க முயன்று 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூர் எளிதாக வெற்றிப் பெற்றுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் பெரேராவும் பாட்டியாவும் அதிரடி காட்ட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 19 ஓவரை வீசிய வாட்சன் பெரேரா விக்கெட்டை வீத்தியதும், ஆட்டம் பெங்களூர் பக்கம் திரும்பியது. 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து பெரேரா ஆட்டமிழந்தார். இறுதியில் புனே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 83 ரன்கள் குவித்த டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.