இஸ்ரேல் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக வரும் வதந்திக்கு ரஷியா எதிர்ப்பு!

201604221621101635_Kremlin-denies-reports-on-Russian-forces-fire-on-Israeli_SECVPF

சிரியா நாட்டு வான்வெளியில் பறந்த இஸ்ரேல் நாட்டு விமானத்தை அங்குள்ள ரஷியப் படைகள் சுட்டுவீழ்த்த முயன்றதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதுதொடர்பாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு, தனது கண்டனத்தை பதிவு செய்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டன. இந்த தகவலை ரஷியா இன்று மறுத்துள்ளது.

ரஷிய அதிபரின் அதிகாபூர்வ இல்லமான கிரம்ளின் மாளிகயில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷிய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ், ‘உண்மைக்கு புறம்பாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன’ என குறிப்பிட்டுள்ளார்.