ஊழல் மோசடிகாரர்கள் மறைமுகமாக பொதுமக்களிடம் பிச்சை வாங்குகிறார்கள் என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியா பிரதேச சபை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,
அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பு முக்கியமானது நாட்டின் அரசியல் நடவடிக்கைகளையும் அபிவிருத்தி திட்டங்களையும் பொதுமக்களுக்கு தெளிவூட்டவேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளான எமக்கு உள்ளது அந்தவகையில் இந்த மக்கள் சந்திப்பை ஏற்பாடுசெய்த ஏற்பாட்டுக்குழுவுக்கும் இதற்குமுன் கருத்துதெரிவித்த சகோதரர்களுக்கும் எனது நன்றிகள்
முன்னால் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்தொன்றை தெரிவித்திருந்தார் நான் நாட்டை கையளிக்கும் போது நாடு நல்லநிலையில் இருந்தது ஒரு கேக் துண்டை நான் அவர்களிடம் கையளித்திருந்தேன் அதை சாப்பிடும் பணிமட்டுமே அவர்களுக்கு இருந்தது என்றார் ஆனால் அவர் நூறு ரூபா பெறுமதியான கேக் துண்டுக்கு ஆயிரம் ரூபா செலவுசெய்திருந்தார் அந்த கேக் துண்டு மிகவும் பழுதடைந்திருந்தது என்பது அவருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை
சற்றுமுன் நீங்கள் கேட்டதுபோன்றே நாட்டில் உள்ள பலரின் மனதில் உள்ள கேள்வி நல்லாட்சி அரசு வாக்களித்ததை போன்று ஊழல் மோசடி காரர்களுக்கு உரிய தண்டனை இன்னும் வழங்கப்படவில்லை என தற்போது ஊழல் மோசடி குற்றசாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட சிலரும் பிணையில் வெளியில் இருக்கிறார்கள் விசாரணைகள் இறுதிகட்டத்தை அடைந்தும் பலர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை இவ்வாறான நிலை தொடர்ந்தால் நல்லாட்சி அரசால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்று ஜனாதிபதி பிரதமருக்கு நன்கு தெரியும் உங்களைப் போன்றே நானும் அவர்களுக்கான உரிய தண்டனையை எதிர்பார்த்துள்ளேன்
மோசடி செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதால் மட்டும் நாட்டில் இருந்து ஊழலை முற்றுமுழுதாக அழிக்கமுடியாது ஊழல் மோசடிகளை கட்டுபடுத்துவதற்கான செயற்திட்டம் அவசியம் இவர்கள் மோசடி செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவந்து அபிவிருத்தி திட்டங்களில் முதலிட வேண்டும் கடந்த பத்து வருடங்களில் மாத்திரம் 2000 கோடி அமெரிக்கடொலர் கறுப்புப்பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலிட்டுள்ளதாக வோசிங்டன் க்ளோபல் பினான்சியல் இன்டக்கிரீட் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது அத்துடன் அண்மையில் கசிந்திருந்த பனாமா பத்திரத்திலுள்ள வரி ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலில் இலங்கையர்களின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது
இவர்கள் மோசடி செய்த பணத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டவே பொதுமக்களின் மீது அதிக வரி சுமை சுமத்த நேரிடுகிறது ஒருவைகையில் இவர்கள் மறைமுகமாக பொதுமக்களிடம் பிச்சை எடுக்கின்றனர் எனலாம்
மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படும் நியமனங்களை தவிர ஏனையே அனைத்து நியமனங்களும் சட்டவிரோதமானது என கூட்டு எதிர்கட்சியினரால் புதிய சட்டம் ஒன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரின் நியமனங்கள் சட்டவிரோதமானது என்றால் உதய கம்மன்பில நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் உங்களுக்கு சாதகமாக தீர்வு வந்தால் நாங்கள் ஒன்றும் நீதிபதியை பதவியில் இருந்து தூக்கி எரியமாட்டோம் உங்கள் ஆட்சியை போன்றல்லாது சுயாதீன நீதித்துறையே எங்கள் ஆட்சியில் காணப்படுகின்றது
எதிர்வரும் ஐக்கியதேசிய கட்சியின் மே தினம் வரலாறு படைக்கும் நான்கு இலட்சத்துக்கு அதிகமானவர்கள் பங்குகொள்வார்கள் விரைவில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கியதேசிய கட்சியின் வெற்றியை இது உறுதிசெய்யும்.உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்போம் என சவால் விடுவதற்கு முன்னர் முடிந்தால் காலியில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதின கூட்டத்தில் உங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்யுங்கள் என டிலான் பெரேரா போன்றவர்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்
இக்கூட்டத்தில் நீங்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் அதற்கான சிறந்த தீர்வுகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் பெற்றுத்தரப்படும் என கூறினார்
ஊடகப்பிரிவு