ஊடக நெறிமுறைகளை நிலைநிறுத்த புதிய ஊடக சட்ட அமைப்பு கொண்டு வருவதினை எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவை உறுப்பினர்களுடன் கலந்து ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதான ஜனநாயக நாடுகளின் ஊடக ஒழுக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவே இலவச சுயாதீன நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.