தனியார் மருத்துவ சேவையில் பின்பற்றவேண்டிய நிபந்தனைகளை உதாசீனம் செய்யும் எந்தவொரு தனியார் மருத்துமனையும் அமைச்சின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமென சுகாதார சேவைகள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களின் சேவை, நோயாளிகளிடம் அறவிடக்கூடிய உச்சபட்சக் கட்டணம், ஏனைய சேவைகள் போன்றவை தொடர்பில் சுகாதார சேவைகள் அமைச்சு அண்மையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிபந்தனைகளை விதித்தது. எனினும், ஏராளமான தனியார் மருத்துவமனைகள் அந்த நிபந்தனைகளை அசட்டை செய்துவருவதாக நோயாளிகள் தெரிவித்துள்ள முறைப்பாடுகளைக் கவனத்திற்கொண்ட சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அத்தகைய மருத்துவமனைகளை அமைச்சின் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.