இரட்டை வாக்குச்சீட்டை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உரிமை வாக்காளர்களுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் !

வாக்­காளர் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இரட்டை வாக்குச் சீட்­டு­களை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உரிமை வழங்­கப்­பட வேண்டும். கலப்புத் தேர்தல் முறை­மை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற பொழுது, நாட்டில் சிதறி வாழும் சிறு­பான்மை சமூ­கங்­களின் கட்­சி­க­ளுக்­கான உரிய பிர­தி­நி­தித்­து­வங்­களை உறுதி செய்து கொள்­வ­தற்கு பய­னுள்ள மாற்றுத் தீர்­வாக இதுவே அமை­யு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தென அக்­கட்­சியின் தலை­வரும், நகர அபி­வி­ருத்தி, நீர்­வ­ழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

புதிய தேர்தல் திருத்தம் தொடர்­பாக மு.கா.வின் முன்­மொ­ழிவை அனுப்பி வைத்த பின்னர் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது சீர்­தி­ருத்தம் தொடர்­பாக கருத்து தெரி­ விக்கும் போதே முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

20ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த வரை வின் நகலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வாரம் அமைச்­ச­ர­வைக்கு சமர் ப்­பித்­தி­ருந்தார். அதில் வேறு­பா­டு­களை களைந்து கொள்­வ­தற்கு இன்­னு­மொரு முய ற்­சியை மேற்­கொள்­வ­தாக நாங்கள் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் ஒவ்­வொரு கட்­சியும் தங்­க­ளது நிலைப்­பாட்டை எழுத்து மூல­மாக இன்று நண்­ப­க­லு க்கு முன்னர் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­திற்கு அனுப்பி வைப்­பது என்ற இணக்­கப்­பாட்­டிற்கு வந்­தி­ருந்தோம்.

எங்­க­ளு­டைய கோரிக்­கைகள் அடங்­கிய ஓர் அறிக்­கையை இன்று ஜனா­தி­பதி செய­ல ­கத்­திற்கு அனுப்ப இருக்­கின்றோம். அதன் பிர­காரம் வாக்­காளர் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இரட்டை வாக்குச் சீட்டை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உரிமை வழங்­கப்­பட வேண்டும். குறிப்­பாக கலப்புத் தேர்தல் முறை­மைஅறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற பொழுது, சிறு­பான்மை சமூ­கங்கள் சிதறி வாழ்­கின்­ற­மை யால் அவர்­க­ளது ஆச­னங்­களை உறுதி செய்து கொள்­வ­தற்­காக இம்­முறை பய­னுள்ள மாற்றுத் தீர்­வாக அமை­யு­மென நாங்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறோம்.

வாக்­காளர் ஒருவர் தனது தேர்தல் தொகு­திக்கு உறுப்­பினர் ஒரு­வரை தெரிவு செய்­வ­தற்­கான வாக்­கோடு சேர்த்து, தாம் விரும்­பு­கின்ற கட்சி ஒன்­றுக்கும் வாக்­க­ளிப்­பது என்ற நிலைப்­பாடும், விகி­தா­சாரத் தேர்தல் முறையில் முழு­மை­யாக கட்­சி­க­ளுக்கு கிடைத்த வாக்­கு­களின் அடிப்­ப­டையில் உறு ப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­கான ஏற்­பா­ டு­களைச் செய்து, அதன் மூலம் எங்கள் தேசிய விகி­தா­சா­ரத்­திற்கு அமை­வாக எங்­க­ ளுக்­கான தேர்தல் தொகு­தி­களை எல்லை மீள் நிர்­ணயம் செய்­கின்ற வாய்ப்­பையும் உள்­ள­டக்க வேண்­டு­மென்று மிக விப­ர­மாக அறிக்­கையைச் சமர்ப்­பிக்­கின்றோம்.

இது சிறு­பான்மைக் கட்­சி­களும், சிறிய கட்­சி­க ளும் பாரா­ளு­மன்­றத்தில் உரிய பிர­தி­நி­தித்­து­வத்தை பெறு­வ­தற்கு பெரிதும் உத­வு­மென்று நாம் நம்­பு­கின்றோம். அவ்­வாறு இல்­லாத பட்­சத்தில் பெரிய தேசிய கட்­சிகள் மட்டும் தான் நன்­மை­ய­டையும்.

இந்­நாட்டில் வாழும் அனைத்து இனங்­களின் நன்­மைக்­கா­கவும், சிறு­பான்மை இன சிறிய கட்­சி­களின் நல­னுக்­கா­கவும் ஒன்­றாக அழுத்­தத்தைக் கொடுப்­ப­தற்கு முன்­வந்­தி­ருக்­கின்றோம் என்றார்.