அமைச்சர் தயா கமகே மற்றும் பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தனவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தானும் தான் சார்ந்துள்ள கட்சியும் வழங்க முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் ஜயவர்தன இதன் போது கூறியுள்ளார்.
மேலும் தேயிலை, இறப்பர், ரயில்வே, பெருந்தெருக்கள் போன்ற அனைத்து துறைகளிலும் பங்களிப்பை வழங்கவும்,
சர்வதேசத்தில் இலங்கையின் தயாரிப்புகள் மற்றும் உற்பத்திகளுக்கு பெறுமதி பெற்றுக்கொடுக்க தேவையான பங்களிப்பை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விரைவில் தான் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் ஜயவர்தன, இலங்கைக்கு ஆதரவு வழங்கும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் பிரித்தானிய – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயம்பதி பெரேராவும் கலந்து கொண்டார்.